D
இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும்.
இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது தொழில் குறித்துதான் ஏனெனில் தொழில் சிறப்பாக இருந்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால் வருகின்ற 2025 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்ததாகவும் மற்றும் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கப் போகின்ற நிலையில் இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
- மீனம்
மீன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் தொழிலில் வெற்றி பெறுவது என்பது கடினம்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
செய்யும் வேலையில் அதிருப்தி அடைவதால், வேலையை மாற்ற முயற்சிக்கலாம்.
இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும் இல்லாவிட்டால், இருக்கும் வேலையையும் இழக்க நேரிடும்.
ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரை இந்த ராசிக்காரர்கள் பல கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். - விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் சற்று சோம்பேறித்தனத்தை அதிகமாக உணரலாம்.
எப்போதும் எதையாவது யோசித்தவாறு இருப்பீர்கள்.
உங்கள் வேலை குறித்த கவலை அதிகமாக இருக்கும்.
பணியிடத்தில் செய்யும் வேலைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வருத்தப்பட நேரிடும்.
வியாபாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டு சுமாராக இருக்கும்.
நிறைய இலாபத்தை பெற விரும்பினால், உங்களின் திட்டங்களை மாற்றி முயற்சிக்க வேண்டும். - கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் பணியிடத்தில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போகலாம்.
அத்தோடு, வேலையில் தடைகளையும், சவால்களையும் நிறைய சந்திக்க வாய்புள்ளது.
2025 ஏப்ரல் வரை வியாபாரிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் நன்றாக இருக்கும்.
ஆனால் இந்த மாதத்திற்கு பின் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மே மாதத்திற்கு பின் சிலருக்கு வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரையிலாக காலகட்டம் தொழில் ரீதியாக பலவீனமாக இருக்கும்.
இக்காலத்தில் வேலையை மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். - சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் பணியிடத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும்.
புதிதாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டு சாதகமாக இருக்காது.
மேலும் கூட்டு தொழில் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகுந்த அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
உங்களின் சிறப்பான செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படாமல் போகலாம்.
மொத்தத்தில் இந்த ஆண்டில் வேலையில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. - கடகம்
2025 ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்கள் பணியிடத்தில் மன அழுத்தத்தை உணரக்கூடும்.
இந்த ஆண்டில் கடினமாக உழைப்பீர்கள் ஆனால் அதற்கான பாராட்டு கிடைக்காது.
வியாபாரிகள் குறைந்த லாபத்தில் திருப்தி அடைய வேண்டியிருக்கும்.
தொழிலில் முன்னேற்றமானது மெதுவாகவே இருக்கும்.
வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதை தவிர்க்க வேண்டும்.
வணிகர்கள் இந்த ஆண்டில் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். - மிதுனம்
2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் புதிய வாய்ப்புக்களுடன், சவால்களையும் சந்திக்க நேரிடும்.
பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அலுவலகத்தில் எப்போதும் மிகவும் பிஸியாக இருப்பீர்கள்.
பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மற்றும் முயற்சிகள் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் போகலாம்.
ஆனால் ஒகஸ்ட் மாதத்திற்கு பின் ஓரளவு சுமாராக இருக்கும்.