Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

​இன்றைய ராசி பலன் 24.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

0 13

இன்றைய ராசிபலன் மே 24, 2024, குரோதி வருடம் வைகாசி 11 வெள்ளிக் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷம் ராசியில் உள்ள அஸ்வினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் மறக்க முடியாத சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று வேலை அல்லது சில விஷயங்கள் குறித்து மிகவும் மும்முரமாக செயல்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். சமூகத்தில் உங்களின் மீது மதிப்பு அதிகரிக்கும். இன்று உங்களின் ரகசியத்தை யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இன்று ஒரு காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.
​ஜூன் மாத ராசி பலன் 2024: பணமும், பதவி உயர்வும் கிடைக்கும் 5 ராசிகள்

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொலைதூரக் கூடிய நாளாக இருக்கும். இன்று வேலையில் சில பிரச்சினைகளை சந்தித்து,அதை சமாளிக்க வேண்டியது இருக்கும். அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும். பணியிடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று பொறுமையும், கோபத்தை தவிர்ப்பதும், இனிமையான வார்த்தைகளை பயன்படுத்துவது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்களின் வேலையில் நல்ல வெற்றியை பெற்றிடலாம். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் நல்ல முடிவும், மகிழ்ச்சியும் கிடைக்கும். நீண்ட காலமாக நீங்கள் நினைத்த இலக்கை அடைய வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உங்கள் வேலையில் பொறுமையுடன், திட்டமிட்டு செயல்பட நல்ல வெற்றியை பெற்றிடலாம். நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். இன்று உங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, வேலையை கவனமாக செய்து முடிப்பது அவசியம். இன்று நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், புதிய அனுபவங்களை பெறவும் வாய்ப்பு உள்ளது. சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உங்களின் வாழ்க்கை உற்சாகமாக மாற நேர்மறை சிந்தனையுடனும், சரியாக திட்டமிட்டு செயல்படவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் இலக்குகளை அடைவதில் சற்று தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களே கவனமாக கையாளவும். உங்களின் இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவைப்படக்கூடிய நாள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட பொன்னான வாய்ப்புகள் அமையும். உங்களுக்கு மனதில் இனிமையை தரக்கூடியதாக இருக்கும். இன்று பண விஷயத்தில் கவனம் செலுத்தி செயல்படவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சில மறக்க முடியாத நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று புத்துணர்ச்சியுடன் , மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சிக்கவும். பணியிடத்தில் சில நல்ல அனுபவங்கள் கிடைக்கும். படிப்பில் நலம் முன்னேற்றத்தை காணலாம். திருமண வாழ்க்கையில் துணையின் முழு ஆதரவு, உங்களுக்கு பெரிய தெம்பாக இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் கடின உழைப்பின் மூலம் நல்ல வெற்றியும், லாபத்தையும் பெறுவீர்கள். எதிரிகள் இடம் இருந்து விலகி இருக்கவும். இன்று நேர்மறையான எண்ணத்துடன் செயல்படவும். குடும்பத்தில் சில சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கில் அல்லது செயலில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் .

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை கவனமாக செய்து முடிப்பது அவசியம். உடல்நலப் பிரச்சினைகள், திடீர் தடங்கள் உங்கள் வேலையை பாதிக்க வாய்ப்புள்ளது. இன்று உறவினர்களிடமிருந்து சில சிறப்பான பரிசுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக செயல்படுவீர்கள். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். முதலீடுகளை செய்வதற்கு முன் துணை நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. இன்று எந்த ஒரு சவாலையும் புத்திசாலிமாக அணுகவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் கவனமாக செயல்பட முன்னேற்ற தெரிவிக்கலாம். இன்று சரியாக ஆலோசித்துச் செய்யக்கூடிய முதலீடு நல்ல லாபத்தை தரும். முக்கிய பக்தர்கள் நல்ல பதவி உயர்வு, சம்பள உயர்வை பெற வாய்ப்புள்ளது. உங்களின் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய ஒப்பந்தங்கள் கிடைத்த மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று துணைக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்வீர்கள். உங்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களின் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் அற்புதமான நாளாக அமைய உள்ளது. வேலையில் பெரிய வெற்றியை பெறலாம். உங்களின் கனவுகள் நிறைவேற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாக அமையும். உங்கள் வேலையில் கடினமான உழைப்பின் மூலம் நல்ல பெயரையும், இலக்கியம் அடைந்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம், உணவு விஷயத்தில் கவனம் தேவை. அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள். இன்று நீங்கள் பல நன்மைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் மழை பொழியும். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்துவது அவசியம். அலுவலக அரசியலில் இருந்து விலகி இருக்கவும். காதலில் மகிழ்ச்சி ததும்பும். அன்புக்குரியவர்கள் தான் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று வரவறிந்து செலவு செய்வது அவசியம். புதிய வீடு, வாகனம் வாங்க முயல்வீர்கள். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக இருப்பதால் எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வேலைகளை முடிப்பதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பொறுமை மற்றும் கோபத்தை கட்டுப்படுத்திச் செயல்பட வேண்டியது அவசியம்.

உங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. திருமண வாழ்க்கை உற்சாகமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். புதிய பக்தர்கள் தங்கள் வேலையை முடிக்க பிசியாக செயல்படுவீர்கள். உங்களின் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தால் வெற்றியை பெறலாம். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

Leave A Reply

Your email address will not be published.