D
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மூலோபாய திட்டத்தினை உருவாக்கும் நோக்கில் முப்படைகளின் வசமுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் (Northern Province) முப்படையினரின் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் ஒன்று, காணி உரிமைக்கான மக்கள் கூட்டணி தலைவர் ச.சதுன் தலைமையில் நடத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள பொதுமக்களின் காணிகளின் தரவுகள் பட்டியல் மற்றும் பாதுகாப்பு படைப்பிரிவில் இல்லாத காணிகளை தரவுகளை தரப்படுத்தல் வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைப்பிரிவின் காணி சுபீகரிப்பு, பெளத்த மயமாக்கல் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைப்பதற்கு விசேட கலந்துரையாடல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கள மாயமாக்கல், தொல்பொருள் அகழ்வு, பெளத்த மயமாக்கல், காணி அதிகாரத்தினை மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும், மதங்களால் உள்ள முரண்பாடுகள், இனங்களுக்கிடையில் பிரச்சினை, வனவிலங்கு அரச திணைக்களங்கள் மக்களின் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டப்டடுள்ளன.
மேலும், வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் காணிகளை கொண்டுள்ள மக்கள் தமது காணி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.