Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து அழைத்துவரப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவர்

0 2

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்போடு தொடர்புடையவர் என நம்பப்படும் பாதாள உலக தலைவரான டன் சிந்தக்க என்ற ஹரக் கட்டாவின் மைத்துனரான மிதிகம ருவன் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது அவர் டுபாய் பொலிஸாரின் காவலில் உள்ளதாகவும், அவரை அழைத்து வருவதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர், டுபாயில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ருவான் மிதிகமவை டுபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சர்வதேச பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயரும் உள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

டுபாய் பொலிஸாரின் காவலில் உள்ள அவர் இன்று (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளார்.

ஹரக் கட்டாவும் கடந்த ஆண்டு டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.