Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இனி அந்த தவறைச் செய்யமாட்டேன்… 700 இந்திய மாணவர்களை ஏமாற்றி கனடாவுக்கு அனுப்பிய நபர்

0 3

சுமார் 700 இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர், தன் தவறுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள்.

அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாயிற்று.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் கனடா வந்த மிஸ்ராவை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனேடிய பொலிசார் கைது செய்தார்கள். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவர் 19 மாதங்கள் மட்டும் சிறையில் செலவிட்டால் போதும்.

இந்நிலையில், மிஸ்ரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று வான்கூவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட்ட மிஸ்ரா, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், எனது தவறுகளுக்காக வருந்துகிறேன், கடந்த காலத்தை என்னால் மாற்றமுடியாது, ஆனால், இனி அந்த குற்றத்தை நான் செய்யமாட்டேன் என என்னால் உறுதியளிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.

கனடாவில் வெறும் 19 மாதங்கள் மட்டுமே மிஸ்ரா சிறையில் செலவிடவேண்டும் என்றாலும், அதற்குப் பின் அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார். இந்தியாவில் அவர் மனிதக்கடத்தல் முதலான குற்றச்சாட்டுகளை எதிகொள்ளவேண்டியிருக்கும்.

விடயம் என்னவென்றால், அந்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை, மரணதண்டனை!

Leave A Reply

Your email address will not be published.