D
2023 ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின்(G.C.E A/L Exam) பெறுபேறுகள் இன்று (31) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.
அத்தோடு, 2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் செயன்முறை பரீட்சைகள் நடத்தப்பட்ட நிலையில் சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சாதாரண தரப் பரீட்சையும் நடந்து முடிந்துள்ள நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.