D
பாதாள உலக செயற்பாட்டாளரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் என கருதப்படும் நடுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனரான மிதிகம ருவன் இன்று அதிகாலை (31.06.2024) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் டுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ருவான் மிதிகமவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றிருந்தது.
டுபாயில் உள்ள இரவு விடுதியில் சண்டையில் ஈடுபட்டதாக கூறி உள்ளூர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மிதிகம ருவன் மேலதிக விசாரணைகளுக்காக விசேட பாதுகாப்பின் கீழ் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும், மிதிகமவைச் சேர்ந்த ருவன், அவரை இரகசியப் பொலிஸாரின் பிடியில் இருந்து விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.