Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கனேடிய மக்களுக்கு சிக்கல்: முக்கிய நகரத்தில இருந்து வெளியேற முயற்சி

0 2

வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக கனடாவின் ரொறன்ரோ (Toronto )நகரை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நிறுவனமொன்று நடத்திய கருத்து கணிப்பினால் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பானது, சுமார் 900 கனடியர்களின் (Canada) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ரொறன்ரோ நகரவாசிகள் கொள்வனவு செய்ய இயலுமை கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அத்துடன், வீடுகளை கொள்வனவு செய்யவுள்ள நகரங்களில் தொழில் வாய்ப்புக்களை பெறவும் தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெறுவதற்கும் மக்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கனேடிய மக்கள் மிகவும் மிகவும் செலவு கூடிய நகரங்களில் இருந்து செலவு குறைந்த நகரங்கள் நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் எடுத்து வருவது தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.