D
ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதியோர் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வசும நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த முதியோர் கொடுப்பனவு நிறுத்தப்படவில்லை நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியதாகவும் இந்த ஜூன் இரண்டாவது வாரத்தின் பின்னர் முதியோர் கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொடுப்பனவை அந்தந்த பிரதேச செயலகங்களில் இருந்து சாதாரண முறையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், ஜூன் மாதத்துக்கான உதவித்தொகையை அதே மாதத்தில் வழங்குவதுடன், முதியோர் கொடுப்பனவை உரிய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையின் கீழ் நலன்புரி நன்மைகள் சபை வரவு வைக்கும்.