D
கனேடிய (Canada) பொருளாதாரத்தில் சிறிதளவு மாற்றம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல் காலாண்டு பகுதியில் கனேடிய பொருளாதாரம் 1.7 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கனேடிய வங்கி வட்டி வீதம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்க உள்ளது.
பொருளாதார தரவுகளின் அடிப்படையில் வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என கனடிய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணவீக்கத்திலும் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.