Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவிகள்

0 100

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிகளான இரவீந்திரராசா பிருந்தா, அன்பழகம் மீனுஜா ஆகியோர் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023(2024) பெறுபேறுகள் நேற்று (31) வெளியாகி இருந்தது.

அந்தவகையில், புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

அன்பழகன் மீனுஜா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கமைய, வர்த்தக பிரிவு பெறுபேறுகளில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி வகிக்கிறது​.

குறித்த மாணவிகளுக்கு பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனரமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.