Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சுமந்திரனின் ஊது குழல் நான் அல்ல: சீ.வீ.கே.சிவஞானம்

0 3

சுமந்திரனின் (M.A.Sumanthiran) ஊது குழல் தாம் அல்ல என்று தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் (C.V.K.Sivagnanam) தெரிவித்துள்ளார்.

தமிரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்பாடு செய்துள்ள பொது வேட்பாளர் சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கருத்துப் பரிமாற்றம் என்பது சதி நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறு நடைபெறுவதாக ஊடகங்களில் தான் நானும் பார்த்தேன். எனக்கென்றால் இதைப் பற்றி எதுவும் தெரியாது.

என்னுடன் எதுவும் சுமந்திரன் கதைக்கவும் இல்லை. இது தொடர்பில் எதுவும் சொல்லவும் இல்லை. ஆனால் ஊடகங்களில் பார்த்த போது இரண்டு தரப்பு கருத்துக்களும் பகிரப்படுவதாகத் தான் இருக்கிறது.

அப்படி செய்யலாம் தானே. எந்தவொரு விடயத்திற்கும் இரண்டு பக்க கருத்துக்கள் இருக்கும். இது இரண்டு அணிகள் என்றில்லை. இரு வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகள் தான் இருக்கிறது.

மேலும் அப்படி அணிகள் என்றால் எங்களுடைய கட்சிக்குள் தான் இருக்கிறது. இந்த விடயத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கூட தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.அது தவறு என்று சொல்லவில்லை.

அவ்வாறு தங்கள் கருத்துக்களை சொல்வது அவர்களது உரிமை. என்னைப் பொறுத்தவரையில் வேட்பாளர் தெரிவிலேயே இது முடங்கும் என்று நான் முதலிலேயே கூறியிருந்தேன்.

அப்படி நான் கூறி பல நாட்களின் பின்னர் தான் சுமந்திரன் கூட இந்தக் கருத்தை கூறியிருந்தார்.

ஆனால் இப்போது நான் இதனை கூறினால் சுமந்திரன் சொல்வதை நான் கூறுவதாகவும் சுமந்திரனின் ஊது குழல் என்றும் என்னை கூறுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. நான் அவருக்கு குழல் ஊதவில்லை. அதேநேரம் என்னைக் கேட்டும் சுமந்திரன் இதனை பேசவில்லை.

அவருடைய கருத்தோ என்னுடைய கருத்தோ எதுவாகவும் இருக்கலாம். அதே நேரம், மக்களின் கருத்து மாறுபட்டும் இருக்கலாம். அதற்காக கருத்து வேறுபாடுகள் இல்லாமலும் இல்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.