Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழில் கடைக்கு சென்ற இரண்டு சிறுவர்கள் சடலங்களாக மீட்பு

0 7

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (1) இரவு 8 மணியளவில், ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.