D
அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எதிர்வரும் அதிபர் தேர்தல் பிரசாரங்களை இம்மாதம் முதல் ஆரம்பிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான தேர்தல் வழிநடத்தல் குழு இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
இதன்படி, இருபத்தைந்து மாவட்டங்களிலும் வீடு வீடாகச் சென்று முக்கியக் கூட்டங்களை நடத்தி மக்களிடம் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்கனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் (SLPP) அமைச்சர்கள் குழுவிற்கு முக்கிய பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.