D
ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான UEFA கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ரியல் மட்ரிட் (Real Madrid) அணி 15ஆவது முறையாக கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
லண்டன் வெம்ப்லி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பொருசியா டோர்ட்மன் (Borussia Dortmund ) அணியை 2 – 0 என்ற கோல் கணக்கில் ரியல் மட்ரிட் வெற்றிகொண்டு கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்தவித கோல்களையும் பெறாத நிலையில் இரண்டாம் பாதியின் 74 ஆவது நிமிடத்தில் ரியல் மட்ரிட்டின் முதல் கோலை டெனி செபாலோஸ் (Dani Ceballos) பெற்றுக்கொடுத்தார்
இதன் பின்னர் 84ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (Vinicius Junior) இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில், இறுதி 90ஆவது நிமிடம் வரை டோர்ட்மன் அணி எவ்வித கோலையும் பெறாத நிலையில் ஆட்டம் ரியல் மட்ரிட்டின் பக்கம் திரும்ப அந்த அணி கோப்பையை சுவீகரித்துள்ளது.
மேலும் ரியல் மட்ரிட்டின் வெற்றியை தொடர்ந்து அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தமது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.