D
நிலவுக்கு தனியார் விமானத்தில் சுற்றுலா செல்லும் திட்டத்தை இரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ஜப்பானிய (Japan) பெரும் கோடீஸ்வரரான யுசாகு மசோவா (Yusaku Maezawa) தெரிவித்துள்ளார்.
இவரது குழுவானது முதலில் வட்டவடிவிலான விமானத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தது. அதில் பயணிகள் என கடந்த ஆண்டு இறுதியில் அந்த திட்டம் செயலில் வரும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் அந்த திட்டமானது சாத்தியமற்றது என்பதை உறுதி செய்துள்ளதாக அவர்களின் இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தெளிவான கால அட்டவணை இல்லாமல் செயல்படும் வாய்ப்பில்லை என்றும், இதனால் கனத்த இதயத்துடன் திட்டத்தை ரத்து செய்யும் தவிர்க்க முடியாத முடிவை மேசாவா எடுத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை ஆதரித்தவர்கள், மற்றும் இணைந்து செயல்பட முடிவு செய்தவர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டம் இரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து முழுமையாக விளக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.