D
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை காரணமாக நாளைய தினம் (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் (A.Aravind Kumar) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.