D
சிறிலங்கா (Sri Lanka) அதிபர் தேர்தலின் வேட்பாளரை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்ததன் பின்னரே பொதுஜன பெரமுன (SLPP) வேட்பாளரை அறிவிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அறிவித்துள்ளார்.
இதேவேளை அதற்கு முன்னர் அதிபர் வேட்பாளரை தமது கட்சி முன்னிறுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் எதிர்வரும் 17ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பொதுஜன பெரமுன தனது அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச குறித்த தகவலை வதந்தி என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.