Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ட்ரம்ப் ஆதரவாளர்களால் கொல்லப்படலாம்… நீதிமன்ற தீர்ப்பால் பிரபலம் ஒருவர் வெளிப்படுத்திய அச்சம்

0 1

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தாம் அதில் இருந்து தப்ப வாய்ப்பில்லை என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல முன்னாள் நடிகை Stormy Daniels.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகமின்றி நிரூபணமான நிலையில், அவர் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் அவர் 4 ஆண்டுகள் வரையான சிறை தண்டனையை தற்போது எதிர்நோக்கியுள்ளார். இந்த விவகாரத்திற்கு காரணமான முன்னாள் ஆபாச பட நடிகை Stormy Daniels தற்போது ட்ரம்ப் ஆதரவாளர்களால் தமது உயிருக்கு ஆபத்து என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அதில் இருந்து தாம் தாப்ப வாய்ப்பில்லை என்றும் அவர்கள் ட்ரம்பை வெறித்தனமாக ஆதரிக்கும் நபர்கள் என்று Stormy Daniels தெரிவித்துள்ளார்.

ட்ரம்புக்கு எதிராக தீர்ப்பு வெளியான பின்னர், வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார் Stormy Daniels. ஆனால், ட்ரம்ப் ஆதரவாளர்களால் தாம் இதுவரை எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்களில் இருந்து உண்மையில் தம்மால் தப்ப முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் எப்போதுமே மோசமான நபராகவே நடந்து கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் கூட தமது செல்வாக்கை பயன்படுத்தி நீதிபதிகளை மிரட்ட முயன்றார். ஆனால் இறுதியில் நீதி வென்றுள்ளது என்றார்.

Stormy Daniels-க்கு ட்ரம்ப் அளித்த 130,000 டொலர் தொகையில் இருந்தே, அவரது வீழ்ச்சி தொடங்கியது. 2016 ஜனாதிபதி தேர்தல் நெருக்கடியில் ட்ரம்ப் எடுத்த தவறான முடிவு அது என்றே கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.