Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு… லண்டனில் 9 வயது சிறுமி குறித்து வெளிவரும் புதிய தகவல்

0 2

லண்டனில் Hackney பகுதியில் உணவகம் ஒன்றின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் நிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த அந்த குடும்பம் கடந்த புதன்கிழமை துருக்கிய உணவகத்தில் உணவருந்தி வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அந்த உணவகம் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான்.

இதில் குறித்த சிறுமியுடன், அடையாளம் தெரியாத மூவரும் காயங்களுடன் தப்பினர். ஆனால் மரியா என்ற அந்த 9 வயது சிறுமியின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ள நிலையில், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

தமது உறவினர்களை சந்திக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து லண்டன் வந்திருந்த சிறுமி தற்போது தலையில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், புதன்கிழமை முதல் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது நிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் நம்பிக்கை அளித்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, சிறுமியின் தந்தை பேசியதாகவும், அதற்கு சிறுமி பதிலளித்துள்ளதாகவும், தந்தையின் விரல்களை பற்றிக்கொண்டதாகவும் அந்த உறவினர் குறிப்பிட்டுள்ளார்.

தலையில் இருந்து தோட்டாவை அகற்றவில்லை என்றும், ஆனால் இன்னொரு அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் தயாராகி வருவதாகவும், அப்போது தோட்டாவை அகற்றுவார்கள் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

சிறுமி மரியா புதன்கிழமை இரவு 9 மணியளவில் Evin உணவகத்தில் வைத்து துப்பாக்கி குண்டுக்கு இலக்கானார். தாக்குதலை முன்னெடுத்த நபர் Ducati Monster மோட்டார் சைக்கிளில் வந்து, அந்த உணவகத்தின் வெளியே காத்திருந்த மூவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அந்த மூவரும் தாக்குதல்தாரியின் இலக்காக இருக்கலாம் என்றே பொலிசார் நம்புகின்றனர். அந்த மூவருக்கும் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் சிறுமிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மூவர் மீது நடத்திய தாக்குதலில், உணவகத்தின் உள்ளே இருந்த சிறுமியின் தலையில் துரதிர்ஷ்டவசமாக குண்டு பாய்ந்துள்ளது என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.