D
ஆனந்த் மற்றும் ராதிகாவின் இரண்டாவது pre-wedding கொண்டாட்ட நிகழ்வு இத்தாலியில் சொகுசு கப்பலில் பிரமாண்டமாக நடந்து வருகிறது.
மே 29 அன்று இந்த நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் தொடங்கியது.
அம்பானி குடும்பம் ஒரு சொகுசு பயணத்தை ஏற்பாடு செய்தது, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்காக பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டன.
இதில் பிரபல பாப் பாடகர்களில் ஒருவரான அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி (Katy Perry) நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிழ்ச்சியில் பாட பாடகி கேட்டி பெர்ரிக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த நிகழ்ச்சியில், பாடகி கேட்டி பெர்ரி மற்றும் ஷகிரா இருவரும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக இருவரும் 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூபா.177கோடி) சம்பளம் வாங்கியிருப்பதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலில் ஐந்து மணிநேர பார்ட்டியின் போது கேட்டி பெர்ரி நிகழ்ச்சி நடத்துவார் என தகவல தெரிவிக்கின்றன.
ரிஹானா, தில்ஜித் தோசன்ஜ், அர்ஜித் சிங், ஸ்ரேயா கோஷல் போன்ற பாடகர்கள் குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் ஜூலை 12-ஆம் திகதி மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.