D
கனடாவில் (Canada) முதியவர்கள் கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டினால் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்டுள்ளது
இந்நிலையில், கஞ்சா கலந்த இனிப்பு பண்டங்களை உட்கொள்வதன் மூலம் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டு அதிகளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நான்கு இலட்சம் சிரேஸ்ட பிரஜைகள் கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கஞ்சா போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், முதியவர்கள் கஞ்சா பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தகலல்கள் எடுத்துக்காட்டுகின்றன.