D
எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், பொது மக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பேருந்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் லொறிகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் டீசலின் விலை கடந்த இரண்டு விலை திருத்தங்களில் 46 ரூபாவால் குறைந்துள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 363 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மே 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 333 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை மேலும் 16 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதன்படி, புதிய விலை 317 ரூபாவாகும், கடந்த இரண்டு விலை திருத்தங்களிலும் டீசலின் விலை 46 ரூபாவால் குறைக்கப்பட்டதால் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.