D
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாவட்ட செயலாளர்களுக்கு உடனடியாக பணத்தை ஒதுக்குமாறு ரணில் நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த தகவல் அதிபர் ஊடகப் பிரிவு (President Media Division) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீரற்ற வானிலையால் முற்றாக சேதடைந்துள்ள அனைத்து வீடுகளையும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அரச நிதியைப் பயன்படுத்தி திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ரணில் (Ranil Wickramasinghe) பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக காவல்துறை விசேட அனர்த்த நிவாரணப் பிரிவை நிறுவியுள்ளது.
அதன்படி, 011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.