D
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பொழுதைக் கழிப்பதில் இன்ஸ்டாகிராம் முதலிடத்தில் உள்ளது.
அந்த வகையில் பயனர்களின் வசதிக்காக, லிமிட் இன்டரேக்ஷன்ஸ் (Limit Interactions) என்ற புதிய அம்சம் இன்ஸ்டாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்த அம்சத்தின் பயன் என்னவென்றால், சமூக வலைத்தளத்தில் ட்ரோல் மற்றும் புல்லிங் போன்றவற்றை தடுக்கும் வகையில் உள்ளது.
அதாவது, தெரியாதவர்களிடமிருந்து வரும் நேரடி குறுஞ்செய்திகள், பதிவுகளுக்கான கமெண்ட்டுகள், போன்றவற்றுக்கான அனுமதி இருக்காது.
இதன் மூலம் தெரிந்தவர்களுடன் மட்டும் நம்மால் தொடர்புகொள்ள முடியும்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தின் செட்டிங் அண்ட் ஆக்டிவிட்டிக்கு சென்று லிமிட் இன்டரேக்ஷன்ஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்தால் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.