D
A Party Facing Deportation From Britain
பிரித்தானிய அரசு, சுகாதாரப்பணியாளர் விசாக்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதைத் தொடர்ந்து, சுகாதாரப்பணியாளர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
பிரித்தானிய அரசு, சுகாதாரப்பணியாளர் விசாக்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், சுகாதாரப்பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர இயலாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, சுகாதாரப்பணியாளர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, சுகாதாரப்பணியாளர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை 76 சதவிகிதமும், அவர்களுடைய குடும்பத்தினரில் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 58 சதவிகிதமும் குறைந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஏற்கனவே பிரித்தனியாவுக்கு வந்துவிட்டவர்கள் விசா விதிகளுக்கு உட்படும் வகையிலான புதிய வேலைகளை இரண்டு மாதங்களுக்குள் தேடிக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகியுள்ளது.
அப்படி வேலை தேடிக்கொள்ள இயலாத நிலையிலிருக்கும் பல இந்திய சுகாதாரப்பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினர் பிரித்தானியாவில் வாழும் நிலையிலும், நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.