D
இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவதற்கு மத்திய வங்கி (central bank of srilanka) தீர்மானித்துள்ளது.
இந்த வகையில் நாளை (05) திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி தெரிவிக்கையில்,
91 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும்.
182 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும் இவ்வாறு ஏலத்தில் விடப்படவுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.