D
சுவிட்சர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றில் ஆடையின்றி அலறியபடித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில், 19 வயது இளைஞர் ஒருவர் ஆடையின்றி சத்தமிட்டபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் பெண்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவரால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் படுகாயம் அடையவே, அவசர உதவிக்குழுவினரும் பொலிசாரும் அங்கு விரைந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
தாக்குதல் நடத்திய சுவிஸ் நாட்டவரான அந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.