D
கேகாலை (Kegalle) பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து சிறு குழந்தையொன்று துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது
குறித்த சம்பவத்தில் மூன்று வயது குழந்தையொன்றே இன்று (04) இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக இன்று காலை வாய்க்கால் ஒன்று வெட்டப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, குழந்தை வாய்க்காலுக்கு அருகில் சென்ற போது அதற்கு மேல் இருந்த மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதும் குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.