D
வவுனியாவில் (Vavuniya) 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (04.06.2024) இடம்பெற்றுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 வயதினையுடைய யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட யுவதியை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.