D
இலங்கையில் ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்களை வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதுசங்க திஸாநாயக்க (Madusanka Dissanayake) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பமானது உலகில் எங்கும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் (Fiber) தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.