D
உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட ரொக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (Space X) உருவாக்கியுள்ளது.
இந்த ராக்கெட் இதற்கு முன் மூன்று முறை வானில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மூன்று முறையில் ரொக்கெட் செலுத்தப்பட்டதும் வெடித்து சிதறி சோதனை தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில் தற்போது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏவிய நிலையில் வெற்றிகரமான வானில் சீறிப்பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
நேற்று (6) காலை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி ஏவப்பட்ட ரொக்கெட் சில நிமிடங்களில், திட்டமிட்டபடி முதல் நிலை பூஸ்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்து விரிகுடாவில் விழுந்து ஸ்டார்ஷிப் ஆறு ராப்டார் என்ஜின்களுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.