D
பாதுகாப்புத்துறை சார் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளின் பதவிக் காலங்களை நீடிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி வரையில் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு அமையவே பாதுகாப்புப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு அண்மையில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாத்திற்கு முன்னதாக தங்களது பதவிக் காலம் முடிவடையும் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகளின் பதவிக் காலம் இவ்வாறு நீடிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் நாட்டின் பாதுகாப்பு திட்டம் அதேவிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.