D
மலாவியின் (Malawi) துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவை (Saulos Chilima) ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் காணாமல் போனதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரேடாரில் இருந்து விலகியதில் இருந்து விமானத்துடன் தொடர்பு கொள்ள விமான அதிகாரிகளின் அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன குறித்த விமானத்தில் மலாவியின் துணை அதிபரான 51 வயதான சிலிமா மற்றும் 9 பேர் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மலாவியின் அதிபர் லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) பிராந்திய மற்றும் தேசியப் படைகளுக்கு விமானம் இருக்கும் இடத்தைக் கண்டறிய உடனடி தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பணி நிமித்தமாக பஹாமாஸ் நாட்டிற்கு செல்லவிருந்த அதிபர் சக்வேரா தனது பயணத்தையும் ரத்து செய்துள்ளதாக தெரிக்கப்படுகிறது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ்-மலாவிய தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இலஞ்ச ஊழலில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டபோது துணை அதிபர் சிலிமாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.