Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஆட்சி அதிகாரத்தை நீடிக்க மறைமுக முயற்சி: ரஞ்சித் ஆண்டகை கடும் குற்றச்சாட்டு

0 3

மக்களின் உரிமையை பறிப்பதற்கு இடமளிக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல் சாசனத்திற்கு அமைவாக ஜனாதிபதியின் பதவிக்காலம் பூர்த்தியாவதுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஐந்தாண்டு பதவிக்காலத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படுவது மக்களின் உரிமைகளில் ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உரிமையை தட்டிப்பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும், சிலர் தங்களது ஆட்சி அதிகாரத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ள மறைமுக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பொது வாக்கெடுப்பு நடத்தும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும், நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீனமான முறையில் தேர்தல்களை நடத்தி தலைவர்களை தேர்வு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.