D
வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நேற்றிரவு தாழமுக்கம் உருவாகியுள்ளது.
இந்த தாழமுக்கமானது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்துஎதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியை உருவாக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்படவுள்ள குறிப்பட்ட சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படவுள்ளது.
வருகிற 25 ஆம் திகதி வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் – கொல்கத்தா) செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.
நாட்டில் இன்று (23) அன்றும் சில நாட்களுக்கும் மி.மீ 100 அளவில் மழை எதிர்பார்க்கப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்தியம், வயம்பா, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் குளிர்ச்சியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வடக்கு, மத்திய மத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வயம்பா மாகாணங்களில் 50 மற்றும் 60 க்கு இடைப்பட்ட காற்று வீசக்கூடியதாக இருக்கும் என்று வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.