D
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் 59 வயதுடைய நபர் ஒருவரை கடந்த 28.05.2024 அன்று முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவியின் கர்ப்பம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் கேப்பாபிலவினை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, மாணவியின் வாய் முறைப்பாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கமைய, நேற்றையதினம் (11.06.2024) 16,17 மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கேப்பாபிலவினை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஜஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு நேற்றையதினம் கைது செய்யப்பட்ட மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அதில் இருவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் 16 வயதுடைய பாடசாலை சிறுவனை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள சிறுவர் நன்நடத்தை இல்லத்திற்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.