Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இணையத்தில் பரவியுள்ள போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள்

0 5

நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று இணையத்தில் பரவியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட போலி வேலை வாய்ப்பு முகவர்கள் ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, நியூசிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து இவ்வாறு பணத்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த போலி வேலை முகவர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்து, தற்காலிக விசா தயாரித்து, இந்தியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச்சென்று, அவர்களை வழியில் விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கடந்த வருடம் இவ்வாறான 95 முறைப்பாடுகளும், இந்த வருடம் 45 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு முறைப்பாடு செய்தவர்களில் சிலர் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் வசிப்பவர்கள் எனவும், திஸ்ஸமஹாராமய, கல்னாவ மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் உள்ள போலி வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவிற்கு எதிராக பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடி வேலை வாய்ப்பு முகவர்களாகக் காட்டிக் கொண்ட 83 பேர் கடந்த ஆண்டும், 24 பேர் இந்த வருடமும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.