D
பிரித்தானியாவில் பள்ளி விதிகளின் காரணமாக நீண்ட தலைமுடி கொண்ட சிறுவன் வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளார்.
லண்டனில் வசிக்கும் 12 வயதான பரூக் ஜேம்ஸ்(Farouk James) என்ற சிறுவன் ஒரு கடினமான சூழ்நிலையில் சிக்கியுள்ளார்.
அதாவது நீண்ட தலைமுடி வைத்துள்ள பரூக் ஜேம்ஸ் பள்ளியின் சீருடை விதிமுறைகளை மீறியதாக கூறி பள்ளி நிர்வாகம் அவரை வெளியேற்ற இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளது.
ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது சுத்தமாக பின்னப்பட்ட கூந்தல் ஒரு பிரச்சினையாக இருக்க கூடாது என வாதிடுகின்றனர்.
பரூக்கின் தலைமுடி மிக நீளமாக வளர்ந்துள்ளது. அவரது குடும்பத்தினர், அது தங்கள் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக கூறுகின்றனர். அங்கு பாரம்பரியமாக குழந்தைகளின் தலைமுடி ஒரு குறிப்பிட்ட வயது வரை வெட்டுவது இல்லை.
இருப்பினும், பள்ளி நிர்வாகம் அவரது தலைமுடி சீருடை விதிமுறைகளை மீறுவதாகக் கருதுகிறது.
ஏப்ரல் மாதம் முதல் பரூக் தண்டனைகளைப் பெற்று வருவதோடு, அவருக்கு வெளியேற்றப்படும் அபாயமும் உள்ளதால் இந்த மோதல் மோசமாகியுள்ளது.