D
போலியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து காட்சிப்படுத்திய இரண்டு சந்தேகநபர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கண்டி தலதா வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 60 வயதுடைய மடவளை மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.