Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரருக்கு காத்திருந்த நற்செய்தி

0 2

கனடாவிலிருந்து(Canada) நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜமெய்க்காவைச் சேர்ந்த தமாரி லிண்டோ மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு நாடு கடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தாமரி யோர்க் பல்கலைக்கழக மாணவர் என்பதுடன் சிறந்த தடைதாண்டி ஓட்டவீரராக போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை தமார ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று பியர்சன் விமான நிலையத்திலிருந்து தமாரி மற்றும் குடும்பத்தினர் நாடு கடத்தப்படவிருந்தனர்.

எனினும் இறுதி நேரத்தில் ஓராண்டு காலம் தற்காலிக அடிப்படையில் கனடாவில் வதிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாமரி மற்றும் குடும்பத்தினரை நாடு கடத்தும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடிதம் ஒன்றை அரசாங்கத்திடம் வழங்கியிருந்தனர். மேலும், அனைத்து தர்பபினரும் தமக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி பாராட்டுவதாக தமாரி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.