Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ரணில் – மகிந்த – பசில் இரகசிய சந்திப்பு: அரசியல் மட்டத்தில் பரபரப்பு

0 1

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி காலை அவசர இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சாகல ரத்நாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே பங்கேற்றுள்ளதுடன், பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் நேற்றைய தினம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான காலவரையறையை தீர்மானிப்பது தொடர்பான விவாதமே பிரதானமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பது தொடர்பில் மிகவும் இரகசியமான கலந்துரையாடலை நடத்தியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் முக்கிய கட்சிகளின் சார்பில் உயர்மட்ட தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளமை குறித்து அதிகம் பேசப்படுகிறது.இதுவொரு இரகசிய சந்திப்பு என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா இல்லையான என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் பரபரப்பு நிலைமையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.