D
கனடாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பிரதேசத்தில் இயங்கி வந்த குறித்த நிறுவனம் ஒன்று கனடாவில் நிதித்துறையில் தொழில் வழங்குவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளது.
எனினும் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என நபர் ஒருவர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
குறித்த நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி செயற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடத்தப்பட்ட விசாரணைகளின் போது சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.