Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

வெளிநாட்டில் பிறந்தாலும் கனேடிய குடியுரிமை உண்டு., இன்று முதல் அமுலுக்கு வரும் சட்டம்

0 4

கனடா அரசாங்கம் வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

கனேடிய குடியுரிமை உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படுகிறது. இது வாக்களிக்கும் உரிமையையும், அரசியல் பதவிக்கு போட்டியிடுவதற்கும் மற்றும் கனேடிய கடவுச்சீட்டை வைத்திருக்கும் உரிமையையும் வழங்குகிறது.

முக்கியமாக புலம்பெயர்ந்தோருக்கு, நாட்டுடன் ஒருங்கிணைய குடியுரிமை என்பது எவ்வளவு முக்கியம் என தெரியும்.

இந்நிலையில், கனேடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும், கனேடிய குஸ்டியுரிமை வழங்கப்படும் வகையில் சட்டம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின்படி, கனேடிய குடியுரிமை பெற்ற பெற்றோர் கனடாவில் பிறந்திருந்தால் அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்பே குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே, கனடாவிற்கு வெளியே பிறந்த அவர்களது குழந்தைக்கு குடியுரிமையை வழங்க முடியும்.

இதனை first-generation limit என்பார்கள். இதன் விளைவாக, கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடிய வம்சாவளியினர், கனடாவிற்கு வெளியே பிறந்த தங்கள் குழந்தைக்கு குடியுரிமையை பெற முடியாது. அதேபோல், கனடாவிற்கு வெளியே பிறந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியாது.

ஆனால், இன்று (மே 23) அந்த சட்டத்தை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Marc Miller மாற்றியமைத்தார்.

கனேடிய குடியுரிமையின் மதிப்பை பாதுகாக்கும் வகையில் முதல் தலைமுறையை தாண்டியும் கனேடிய வம்சாவளி குழந்தைக்கு குடியுரிமையை நீட்டிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம், இப்போது வெளிநாட்டில் பிறந்த கனேடியரின் வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு கனேடிய குடியுரிமை தானாகவே வழங்கப்படும்.

இது வெளிநாட்டில் பிறந்த மற்றும் முதல் தலைமுறைக்கு அப்பால் கனேடிய பெற்றோரால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமையின் நேரடி அணுகலை நீட்டிக்கும்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, கனடாவுக்கு வெளியே பிறந்த குழந்தைகளைப் பெற்ற அல்லது தத்தெடுக்கும் வெளிநாட்டில் பிறந்த பெற்றோர்கள், குடியுரிமையைப் பெறுவதற்கு தங்கள் குழந்தை பிறப்பதற்கு அல்லது தத்தெடுப்பதற்கு முன்பு கனடாவில் குறைந்தது 1,095 நாட்கள் கழித்திருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.