Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா

0 5

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் செம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா அணி தனதாக்கியுள்ளது.

கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா அணி தனதாக்கிக்கொண்டது.

இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

பரபரப்பாக ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் அடிக்கவில்லை.

அதன் பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதன்படி போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார்.

இது ஆர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

Leave A Reply

Your email address will not be published.