Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இளவரசி கேட்டை தொடர்புகொள்ள முயன்ற ஹரி… ஆனால்: ராஜ குடும்ப நிபுணர் கூறியுள்ள தகவல்

0 2

தாத்தா பாட்டியும் பேரப்பிள்ளைகளும், அப்பாவும் பிள்ளைகளும், அண்ணனும் தம்பியும், அண்ணியும் மைத்துனரும் என, இளவரசர் பிலிப், மகாராணி எலிசபெத், மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம் ஹரி, வீட்டுக்கு ஒரே செல்லப் பெண் இளவரசி கேட் என, திரைப்படத்தில் காட்டப்படும் குடும்பம்போல ஆனந்தமாக இருந்த குடும்பம், பிரித்தானிய ராஜ குடும்பம்.

சின்னாபின்னமாய்ப்போனது. ராஜ குடும்ப மரபுகளுடன் ஒத்துப்போக முடியாத மேகன் தினமும் ஒரு பிரச்சினையை உண்டுபண்ணிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ராஜ குடும்பத்தை விட்டும், பின் பிரித்தானியாவை விட்டும் ஹரியும் மேகனும் வெளியேற, தாத்தா பாட்டிக்கும் பேரனுக்கும் இருந்த உறவு, அண்ணன் தம்பிக்குள் இருந்த உறவும், கூடப்பிறந்த சகோதரி போல் பழகிய இளவரசி கேட்டுடனான உறவு என அனைத்தும் பிளவுபட்டதுடன், ஹரி மேகன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, ஹரி எழுதிய புத்தகம் என எல்லா விடயங்களும் சேர்ந்து குடும்பத்தைக் கலைத்துப்போட்டன.

இந்நிலையில், இளவரசி கேட்டை தொடர்புகொள்ள இளவரசர் ஹரி முயன்றதாக ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரி பிரித்தானியாவிலிருந்து வெளியேறியபின், ஹரி தொடர்புகொண்ட ஒரே நபர் இளவரசி கேட்தான் என்று கூறியுள்ளார் Tom Quinn. ஆனால், முன்போல் ஹரிக்கு வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகமே என்கிறார் அவர்.

கேட் அன்பானவர், நல்ல இதயம் கொண்டவர், ஆனால், தற்போது அவர் இளவரசர் வில்லியமுடைய அணியில் இருக்கிறார். அத்துடன், புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில், தனது உடல் நிலையை சமாளிக்க பாடுபட்டுவருகிறார் அவர். இனி அவர் சகோதரர்களுக்கிடையே சமாதான முயற்சிகள் மேற்கொள்வாரா என்பது தெரியாது. எப்படியாவது தனது உடல் நிலை முன்னேறி, தனது கடமைகளுக்குத் திரும்ப மருத்துவர் எப்போது அனுமதி தருவார் என்பதே இப்போது அவருடைய முதன்மை நோக்கம் என்கிறார் Tom Quinn.

Leave A Reply

Your email address will not be published.