D
கனடாவின்(Canada) முக்கிய நகரங்களில் ஒன்றான டொரன்டோவில்(Toronto) வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் டொரன்டோவின் வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் ஈரப்பதனின் அளவு அடிப்படையில் இந்த வெப்பநிலையானது சுமார் 37 பாகை செல்சியஸ் அளவாக உணர நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றாரியோ மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் வெப்பநிலை நீடிக்கும் என கனேடிய தேசிய வளிமண்டலவியல் முகவர் நிறுவனம் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி காற்றின் தரம் குறைவடையும் எனவும் அறிவுறுத்தியுள்ளதோடு, நாளையும் 29 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.