D
இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தை தொடர்ந்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ உத்தரவு
இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை விதித்து உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.