D
ஓமான் (Oman) நாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
யேமனின் ஏடன் நகர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பிரஸ்டிஜ் பெல்கொன் (Prestige Belcon) என்ற கப்பல் 16 பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானது.
இதில், 3 பேர் இலங்கையர்கள் என்பதோடு ஏனையவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஏனைய மாலுமிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.