D
சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்று இரண்டு மாத சம்பளத்தை தராதுபேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்தி நாட்டுக்கு திருப்பி அனுப்பி விட்டனர் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ”யுத்தம் காரணமாக இடம்பெய்ர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன்.
அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த நாடு என சவூதியை தெரிவு செய்து முகவர்கள் மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.
நான் அங்கு ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியவில்லை. அங்கு செல்லும்போது எனக்கு 49 வயது. ஆரம்ப தொகையாக அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.
தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன்.என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள்.
இந்நிலையில், இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை.
2015 ஆம் ஆண்டு ஆடி மாதம் சென்ற என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிஸில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.
எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று, தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன்.
மேலும், அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.